ADVERTISEMENT

"போராட உரிமை உண்டு, ஆனால்..." ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை...

04:02 PM Feb 10, 2020 | kirubahar@nakk…

குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியின் ஷாஹின் பாக் பகுதியில் 50 நாட்களை கடந்தும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெண்களால் நடத்தப்படும் இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதாகவும், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை இன்று விசாரித்த நீதிபதிகள் கவுல் மற்றும் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த சட்டம் பற்றிய வழக்கு ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒரு சட்டம் குறித்து மக்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. எனவே அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர்.

அதற்கு அவர்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதேசமயம் போராட்டம் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது. சாலைகளை மறிக்கக் கூடாது. இதுபோன்ற பகுதியில் நீண்டகாலமாக போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து போராட விரும்பினால் அதற்கு ஏற்ற ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்" என தெரிவித்தது. மேலும் இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசும், சம்பந்தப்பட்டவர்களும் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT