ADVERTISEMENT

தேவையில்லாத சர்ச்சை... அசோக் லவாசா விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் கருத்து...

02:55 PM May 18, 2019 | kirubahar@nakk…

நாடு முழுவதும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா மற்றும் மோடி ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் பேசியதாக காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அசோக் லவாசாவின் கருத்தை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கேட்கவில்லை எனவும், இதனால் இனி நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும் அசோக் லவாசா தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, "‘தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பான ஒன்றுதான். 3 பேர் இருக்குமிடத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வை இருக்கலாம். அனைவரும் ஒரே மாதிரி யோசித்து செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது தேவையில்லாத சர்ச்சை" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT