ADVERTISEMENT

"இனி இவர்கள் இருவருக்கும் தான் அரசியல் போட்டி" - சுப்பிரமணியன் ஸ்வாமி கணிப்பு...

05:45 PM Dec 03, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசியலில் ரஜினி வருகையைத் தொடர்ந்து, அவருக்கும் சசிகலாவுக்கும் தான் போட்டி இருக்கும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என இன்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். "மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம், இப்ப இல்லைனா எப்பவும் இல்ல. தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்" எனத் தனது ட்விட்டர் பதிவின் மூலம் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார் ரஜினி. இந்நிலையில், தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே போட்டி நிலவும் என சுப்பிரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் ஸ்வாமி இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், "ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்விகள் முடிவுக்கு வந்தது; தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே போட்டி நிலவும்; பா.ஜ.க குழப்பமான நிலைக்குச் செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT