ADVERTISEMENT

நிர்மலா சீதாராமனை விமர்சித்த சுப்ரமணியன் ஸ்வாமி...

05:14 PM Sep 02, 2019 | kirubahar@nakk…

நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தை பற்றி எதுவும் தெரியாது எனவும், அவரால் தற்போது நிலவி வரும் தேக்கநிலையை சரிசெய்ய முடியாது எனவும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன் ஸ்வாமி, "ப.சிதம்பரம் மீது 7 வழக்குகள் உள்ளன. அவருக்கு எப்படியும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். அவருடன் சேர்த்து சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் சிறைக்கு செல்வார்கள். கூடிய விரைவில் திகார் சிறையில் காங்கிரஸ் கட்சி கூட்டமே நடத்தலாம். காங்கிரஸ் செய்த அதிக ஊழல் தான் பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணம். அப்போது மன்மோகன்சிங் ஒரு கைக்கூலியாக இருந்தார்.

நரேந்திர மோடி ஒரு வீரர். அவர் நாட்டிற்கு பல நன்மைகளை செய்துள்ளார். ஆனால் பொருளாதாரத்தில் சிறந்த கொள்கைகள் வேண்டும். இதுவரை பாஜக ஆட்சியில் பொருளாதார மேதைகள் யாரும் நிதியமைச்சராக இருந்ததில்லை. அருண் ஜெட்லியும், நிர்மலா சீதாராமனும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாதவர்கள். அதுபோல நிர்மலா சீதாராமனால் தற்போதுள்ள பொருளாதார தேக்கநிலையை அவரால் சரிசெய்ய முடியாது" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT