ADVERTISEMENT

ஒற்றுமையின் சிலைக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... மகிழ்ச்சியில் பிரதமர்...

04:12 PM Aug 28, 2019 | kirubahar@nakk…

டைம்ஸ் இதழ் வெளியிட்டு உள்ள 2019 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 இடங்கள் என்ற பட்டியலில் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒற்றுமையின் சிலையும் இடம்பெற்றுள்ளது. இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த 182 மீட்டர் உயரம் உடைய சிலை, உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதி இந்த சிலை திறந்துவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "ஒற்றுமையின் சிலை டைம்சின் சிறந்த இடங்கள் 2019 பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது சிறந்த செய்தி. சில நாட்களுக்கு முன்பு, ஒரே நாளில் 34,000 பேர் பார்வையிட்டனர். இது ஒரு பிரபலமான சுற்றுலா இடமாக வளர்ந்து வருவதில் மகிழ்ச்சி" என தெரிவித்து உள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT