ADVERTISEMENT

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை விடுவிப்பு!

07:58 PM Jul 15, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி (GST) இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 75,000 கோடியை விடுவித்தது மத்திய நிதித்துறை அமைச்சகம்.

ADVERTISEMENT

அதிகபட்சமாக கர்நாடகா மாநிலத்திற்கு ரூபாய் 8,542.17 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூபாய் 6,501.11 கோடியும் விடுத்துள்ளது. அதேபோல், ஆந்திரா- ரூபாய் 1,543.43 கோடியும், அசாம்- 836.81 கோடியும், பீகார்- 3,215.18 கோடியும், சத்தீஸ்கர்- 2342.04 கோடியும், கோவா- ரூபாய் 399.54 கோடியும், குஜராத்- 6,151.10 கோடியும், ஹரியானா- ரூபாய் 3,487.83 கோடியும், ஹிமாச்சல் பிரதேசம்- ரூபாய் 1,271.26 கோடியும், ஜார்க்கண்ட்- ரூபாய் 1,171.73 கோடியும், கேரளா- ரூபாய் 4,122.27 கோடியும், மத்திய பிரதேசம்- ரூபாய் 3,307.16 கோடியும், மேகாலயா- ரூபாய் 66.51 கோடியும், ஒடிஷா- ரூபாய் 3,033.10 கோடியும், பஞ்சாப்- ரூபாய் 5,722.78 கோடியும், ராஜஸ்தான்- ரூபாய் 3,428.39 கோடியும், தமிழகம்- ரூபாய் 3,818.50 கோடியும், தெலங்கானா- ரூபாய் 2,155.25 கோடியும், திரிபுரா- ரூபாய் 189.15 கோடியும், உத்தரபிரதேசம்- ரூபாய் 3,839.72 கோடியும், உத்தரகாண்ட்- ரூபாய் 1,572.21 கோடியும், மேற்கு வங்கம் - ரூபாய் 3,030.73 கோடியும், டெல்லி- ரூபாய் 2,921.30 கோடியும், ஜம்மு & காஷ்மீர்- ரூபாய் 1,813.73 கோடியும், புதுச்சேரி- ரூபாய் 517.00 கோடியும் மத்திய நிதித்துறை அமைச்சகம் விடுத்துள்ளது.

23 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT