நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்டோமொபைல் துறைகள், அதனை சார்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள், கனரக வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தும், தொழிற்சாலைக்களுக்கு விடுமுறை அளித்தும், ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஆகஸ்ட்- 23 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, மோட்டார் வாகன தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அதிரடியாக அறிவித்தார்.

union finance minister nirmala sitharaman cancel the today press meet

Advertisment

Advertisment

அதனை தொடர்ந்து ஆகஸ்ட்- 30 ஆம் தேதி இரண்டாவது முறையாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, வீட்டுக்கடன், வாகன கடன் வட்டி குறைப்பு, ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்கப்படும் என பல்வேறு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 14-ம்தேதி) டெல்லியில் மீண்டும் மூன்றாவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்புநடைபெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.