ADVERTISEMENT

திருவிதாங்கூர் சித்திரை திருநாள்... இஸ்ரோ தலைவர் சிவன்!

02:33 PM Sep 24, 2019 | Anonymous (not verified)

இந்தியாவின் பெரிய சமஸ்தானத்தின் ஒன்றாக இருந்த கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராட்சியின் கடைசி மன்னராக இருந்து ஆட்சி செய்தவர் ஸ்ரீ சித்திரை திருநாள் மகாராஜா. இவருடைய ஆட்சியின் போது தான் அனைத்து ஜாதியினரும் கோவில் பிரவேசம் செய்யலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவரின் நினைவாக அவர் பெயரிலான அறக்கட்டளை சார்பில் ஆண்டுத்தோறும் கலை, இலக்கியம், மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் துறைகளில் சாதனை படைப்பவர்களை பாராட்டும் விதமாக தேசிய விருது வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT



ADVERTISEMENT

ஸ்ரீ சித்திரை திருநாள் மன்னர் 14 ஆவது தேசிய விருது இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இதற்கான சாதனையாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த அறக்கட்ளையின் தலைவரும் முன்னாள் வெளிநாட்டு தூதருமான ஸ்ரீனிவாசன், முன்னாள் கேரளா அமைச்சர் சுரேந்திரன், பத்திரிக்கையாளர் எம்.ஜி ராதாகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் சதீஷ்குமார், ஸ்ரீசித்திரை திருநாள் பள்ளி முதல்வர் புஷ்பவல்லி கொண்ட குழுவினர் இஸ்ரோ தலைவர் சிவனை தேர்ந்தெடுத்தனர்.

இந்த தகவலை அறக்கட்டளை சார்பில் சிவனிடம் தெரிவிக்கப்பட்டது. ரூ. 3 லட்சம் பணம் மற்றும் பாராட்டு பத்திரத்துடன் விருது வழங்கப்படுகிறது. விருது வழங்கும் நிகழ்ச்சி காரக்கோணம் ஸ்ரீசித்திரை திருநாள் பள்ளியில் நடக்க இருக்கிறது. இந்த விருதை இந்தியா ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி வழங்குவார் என்று அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT