ADVERTISEMENT

ஒற்றை நுழைவுத் தேர்வு- ஆராய இம்மாத இறுதியில் நிபுணர் குழு! 

10:22 PM Aug 16, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகளுக்கு ஒற்றை நுழைவுத் தேர்வு முறையை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கான நிபுணர் குழு, இந்த மாத இறுதியில் அமைக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அனைத்து உயர் கல்விகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ் குமார் பேட்டியளித்துள்ளார். அதில், மாணவர்கள் உயர் படிப்புகளில் சேர பல்வேறு நுழைவுத் தேர்வுகள் எழுதுவது, அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, கியூட், ஜெ.இ.இ., நீட் ஆகிய நுழைவுத் தேர்வுகளை ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்த திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமும் இதுவே என அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகப்பெரிய முடிவு என்றும், எனவே, அவசரப்படாமல் மிகுந்த கவனத்துடன், இது செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகள் குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து, அவற்றை ஒருங்கிணைப்பதற்கான பரிந்துரைகளை தரும் என்றும், இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பதை இப்போதைக்கு கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT