ADVERTISEMENT

"கணக்குகள் முடக்கப்படலாம்"... வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ -யின் எச்சரிக்கை...

12:37 PM Feb 07, 2020 | kirubahar@nakk…

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி KYC எனப்படும் வாடிக்கையாளர்களின் அடிப்படை தகவல் படிவம் வரும் 28 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளையும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களையும் கொண்ட எஸ்.பி.ஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் KYC படிவத்தை சமர்பிக்காத வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வங்கிக்கணக்கு முடக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியில் விதிகளின்படி, நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து KYC படிவங்களை பெற்று வருகிறது. அதனபடி எஸ்.பி.ஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை தங்களது KYC படிவத்தை சமர்பிக்காதவர்கள் அருகிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையிலோ அல்லது நெட் பேக்கிங் மூலமாகவோ ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கிளைகளில் நேரடியாக சென்று ஆவணங்களைச் சமர்ப்பிப்பதாக இருப்பின், கணக்கிற்கு உரிய நபர் நேரடியாகச் சென்று சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT