ADVERTISEMENT

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்த ஸ்டேட் பேங்க்... தகவலறியும் உரிமை சட்டத்தில் வெளியான தகவல்...

10:58 AM Oct 11, 2019 | kirubahar@nakk…

220 வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ76,600 கோடி வாராக்கடனை எஸ்.பி.ஐ தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனியார் தொலைக்காட்சி ஒன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், வாராகடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை பெற்றுள்ளது. அதன்படி எஸ்.பி.ஐ வங்கி 100 கோடி ரூபாய்க்கு அதிகமான கடன் வழங்கிய 220 வாடிக்கையாளர்களின் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ரூ.100 கோடிக்கு மேல் கடன் பெற்று, திருப்பி செலுத்த முடியாமல் திவால் ஆனவர்களின் கடன்களை எந்தெந்த வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன என்ற இந்த பட்டியலில் ஸ்டேட் வங்கியானது ரூ100 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள 220 கடனாளிகளின் ரூ76,600 கோடியை தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல், ரூ.500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள கடனாளிகளின் ரூ37,700 கோடி கடனை எஸ்.பி,ஐ தள்ளுபடி செய்துள்ளது.

கோடிக்கணக்கான தொகை கடன்களை தள்ளுபடி செய்த இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிய 94 வாடிக்கையாளர்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளிடம் வாங்கப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை மொத்தம் ரூ2.75 லட்சம் கோடி என தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண வாடிக்கையாளர்களிடம் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் விதிக்கும் இந்த வங்கிகள் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் இவ்வளவு கடனை தள்ளுபடி செய்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக அதன் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT