இந்தியாவின் மிக முக்கியமான பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, அதன் வாடிக்கையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்யப்படும் பிக்ஸ்ட் டெபாசிட்களுக்கான வட்டி விகிங்களை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

sbi reduces interest rates on fixed deposits

Advertisment

Advertisment

வங்கியின் புதிய அறிவிப்பின்படி, 7 நாள் முதல் 45 நாட்கள் வரை செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 46 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான பிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.25 சதவீகிதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

7 மாதங்களில் இருந்து ஒராண்டுக்குள் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி 6.40 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும் 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளின் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதமாகவும், 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளின் வட்டி 6.75 சதவீதத்தில் இருந்து 6.70 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீண்ட கால டெபாசிட்டுகளான 3 முதல் 5 ஆண்டுகள் வரை உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி 6.70 சதவீதத்தில் இருந்து 6.60 சதவீதமாகவும், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி 6.60 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.