ADVERTISEMENT

பகவத் கீதை, மோடி படத்தோடு விண்ணிற்குப் பறக்கும் சாட்டிலைட்!

05:36 PM Feb 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு, இந்திய மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கப் பணியாற்றி வருகிறது. இந்தநிலையில், தற்போது இந்த அமைப்பு, இந்திய விண்வெளித்துறை வரலாற்றில் முக்கிய விஞ்ஞானியான சதீஸ் தவான் பெயரில் நானோ சாட்டிலைட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த சாட்டிலைட் இம்மாத இறுதியில் விண்ணில் ஏவப்படுகிறது.

மேலும் இந்த சாட்டிலைட், விண்வெளியில் ஏற்படும் கதிர்வீச்சையும், காந்த மண்டலத்தையும் ஆய்வு செய்யக் கருவிகளையும் எடுத்துச் செல்கிறது. மேலும் மற்ற விண்வெளித் திட்டங்களில் பைபிள் போன்ற புனித நூல்களை எடுத்துச் செல்வதைப்போல, இந்த சாட்டிலைட்டில் பகவத் கீதையை எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாட்டிலைட்டில், 25,000 பேரின் பெயர்களும் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன. இந்த விண்வெளி திட்டத்திலும், விண்வெளி அறிவியலிலும் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த, மக்களின் பெயர்கள் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. விண்வெளிக்கு அனுப்பும் பெயர்களைக் கேட்டபோது, ஒரே வாரத்தில் 25 ஆயிரம் பேர், தங்கள் பெயரை விண்வெளிக்கு அனுப்பப் பதிவு செய்துகொண்டதாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு, "இந்த சாட்டிலைட்டில் சுயசார்பு திட்டம் என்ற வார்த்தையோடு பிரதமர் மோடியின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சாட்டிலைட் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது" எனக் கூறியுள்ளது. இந்த சாட்டிலைட்டின் அடிப்பாகத்தில் இஸ்ரோ தலைவர் சிவனின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சாட்டிலைட்டை இஸ்ரோ, ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து, பி.எஸ்.எல்,வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT