ADVERTISEMENT

ஓலாவில் இதுவரை இல்லாத அளவில் சச்சின் பன்சால் முதலீடு...

05:27 PM Feb 19, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

பெங்களூரு நிறுவனமான ஓலா டாக்ஸி நிறுவனத்தில் ரூ. 650 கோடியை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான சச்சின் பன்சால் முதலீடு செய்துள்ளார். இதுவரை ஓலா நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடுகளிலே இதுதான் அதிகத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியபோது இவரின் பங்குத் தொகையாய் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை பெற்றார். அதன்பின் அந்தத் தொகையை பல சிறு நிறுவங்களில் முதலீடு செய்துவருகிறார். அந்த வகையில் தற்போது ஓலா நிறுவனத்திலும் ரூ. 650 கோடியை முதலீடு செய்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT