ADVERTISEMENT

சிஏஏ ஆதரவு போராட்டம்... பெண் துணை ஆட்சியரின் தலைமுடியை இழுத்து தள்ளிய போராட்டக்காரர்கள்...

11:01 AM Jan 20, 2020 | kirubahar@nakk…

குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல பாஜக சார்பில் நாடு முழுவதும் சிஏஏ ஆதரவு பேரணிகளும், விளக்க கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்தவகையில், மத்திய பிரதேசம் மாநிலம், ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள பியோவோரா பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணி நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரியா வர்மா மற்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

இதில் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் ஆட்சியரின் தலைமுடியை பிடித்து போராட்டக்காரர்கள் எழுத்து தள்ளினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT