/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_168.jpg)
பழங்குடியின வாலிபர் மீது பாஜக எம்.எல்.ஏவின் மகன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த ராம்லால் வைஷ் என்பவர்உள்ளார். இவரது மகன் விவேகானந்தன் வைஷ்(40) மீது சட்டவிரோத நிலக்கரி விநியோகம், மரக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் விவேகானந்தன் வைஷ் நேற்று முன்தினம் சூர்யபிரகாஷ் கைர்பர் என்ற பழங்குடியின இளைஞருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் இருவருக்கும் முற்றவே வாகனத்தில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சூர்யபிரகாஷைசுட்டுள்ளார். அதில் அவரது வலது கையில் குண்டு பாய்ந்தது. இதனால் படுகாயமடைந்த சூர்யபிரகாஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள விவேகானந்தனைத் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)