ADVERTISEMENT

குழந்தையாக ஓடி விளையாடும் ரோவர்; தாயாக வீடியோ எடுத்த லேண்டர் - வர்ணிக்கும் இஸ்ரோ 

03:23 PM Aug 31, 2023 | kalaimohan

ADVERTISEMENT


இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

ADVERTISEMENT


தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை சந்திரயான்-3 கொடுத்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், நிலவின் மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றி பரிசோதித்து பல ஆய்வு முடிவுகளை அனுப்பியதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. தொடர்ந்து நேற்று (30.08.2023) காலை 7.35 மணியளவில் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் தற்பொழுது நிலவில் ஓடி விளையாடும் ரோவரை விக்ரம் லேண்டர் வீடியோ எடுத்து அதனை அனுப்பியுள்ளது. நிலவின் தரையில் குழந்தை விளையாடுவதை தாய் வேடிக்கை பார்ப்பதைப் போல் இந்த காட்சி அமைந்திருப்பதாக ட்விட்டர் வலைத்தளத்தில் வீடியோவை பதிவிட்டு வர்ணித்துள்ளது இஸ்ரோ.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT