ADVERTISEMENT

சிவன் வடிவிலான சர்வதேச கிரிக்கெட் மைதானம்!; அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

01:07 PM Sep 23, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். இவர் இந்த தொகுதியின் எம்.பி.யாக 2வது முறையாக இருக்கிறார். இந்த நிலையில், வாரணாசியில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை உத்தர பிரதேச அரசு மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், தனது தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து, பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அதன்படி, வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்காக உத்தரபிரதேச மாநில அரசு, ரூ.121 கோடி மதிப்புள்ள நிலத்தை வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்துள்ளது. மேலும், இந்த மைதானம் 30 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானத்தில் சுமார் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது.

கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகள், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக அதன் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து, இந்த மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் பி.சி.சி.ஐ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாரணாசிக்கு வருகை தந்துள்ளனர். இதையடுத்து அவர்கள், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை சென்றுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT