ADVERTISEMENT

ஜெகன்மோகன் - பவன்கல்யாண் இடையே வலுக்கும் மோதல்... ஆந்திர அரசியலில் பரபரப்பு...

10:16 AM Nov 14, 2019 | kirubahar@nakk…

ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து அடுத்தடுத்த மக்கள் நல திட்டங்கள் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்று வந்தார். ஆனால் சமீபகாலமாக ஜெகனை சுற்றி சர்ச்சைகள் அதிகளவில் சூழ ஆரம்பித்துள்ளன எனலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்தவகையில் ஆந்திர அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அமல்படுத்தப்படும் என்ற அவரது அறிவிப்பு பல்வேறு தரப்புகளிலும் எதிர்ப்பை சம்பாதித்தது. அவரது இந்த முடிவை ஆந்திர மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான சந்திரபாபு நாயுடு மற்றும் பவன்கல்யாண் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பவன்கல்யாண் குறித்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாணுக்கு 3 திருமணங்கள் ஆகியுள்ளதாகவும், அதன் மூலம் 5 குழந்தைகள் உள்ளதாகவும், அவர்கள் எந்த மொழியில் கல்வி பயின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

பவன்கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் ஜெகன்மோகனின் பதில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. ஜெகனின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பவன்கல்யாண், ஜெகன் மோகன் ரெட்டி சிறைக்குச் சென்றதற்கும் எனது திருமணம்தான் காரணமா என கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் மத்தியிலுமான இந்த வார்த்தை போர் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான வழிகளில் சொத்து சேர்த்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT