ADVERTISEMENT

போலீஸாரால் முன்னாள் முதல்வருக்கு ஏற்பட்ட அவமரியாதை... பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு...

12:27 PM Aug 23, 2019 | kirubahar@nakk…

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (82) புதன்கிழமை காலமானார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவின் காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். பீகார் மாநிலத்தின் 14 வது முதல்வராக 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை பணியாற்றியுள்ளார் மிஸ்ரா.

இதனையடுத்து மிஸ்ராவின் இறுதிச்சடங்கு, அவரது சொந்த ஊரான சுபால் மாவட்டத்தில் உள்ள பாலுவா பஸார் பகுதியில் நடந்தது. பின்னர் அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் என்பதால், 22 முறை வானை நோக்கி துப்பாக்கிகள் முழங்க அவரது உடலை முழு அரசு மரியாதையோடு தகனம் செய்ய திட்டமிடப்பட்டது.

ஆனால் தகன நேரத்தில் போலீசார் வானத்தை நோக்கி சுட்ட போது ஒரு துப்பாக்கி கூட வெடிக்கவில்லை. போலீசார் மீண்டும், மீண்டும் விசையை அழுத்தியும் ஒரு துப்பாக்கி கூட, ஒரு குண்டை கூட வெளியேற்றவில்லை. இதனால், அங்கு கூடியிருந்தவர்கள் சலசலக்க போலீசாருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. மேலும் இது முன்னாள் முதல்வருக்கு நடந்த அவமரியாதை என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த விவகாரம் முதல்வரின் காதுகளுக்கு எட்டிய நிலையில், இது தொடர்பாக விசாரிக்க அவர் போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT