ADVERTISEMENT

வெள்ளத்தில் தத்தளித்த காண்டாமிருகத்தை காப்பாற்றிய மீட்புக்குழு...வைரலாகும் வீடியோ!

11:37 PM Jul 18, 2019 | santhoshb@nakk…

இந்தியாவில் கடந்த மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத், பீகார், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய ஆறுகள் நிரம்பியுள்ளதால், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 29 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. இந்த மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்குகள் பூங்கா 90 சதவீதம் வெள்ள நீரில் மிதக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனால் பூங்காவில் உள்ள வன விலங்குகளை மீட்கும் பணியில் சமூக ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் காசிரங்கா பகுதியில் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட குட்டி காண்டாமிருகத்தை மீட்கப்படும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்திற்கு நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூபாய் 251.5 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT