ADVERTISEMENT

டெல்லி வன்முறை பகுதியில் நிகழ்ந்த மத நல்லிணக்க நெகிழ்ச்சி சம்பவம்!!

01:23 PM Feb 27, 2020 | kalaimohan

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கடந்த 24-ந் தேதி கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. வன்முறை சம்பவங்களில் இதுவரை 35 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் சுமார் 200 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வன்முறை சம்பவத்தில் வீடுகளை இழந்த இஸ்லாமிய மக்களுக்கு இந்துக்கள் தங்களது வீடுகளில் பாதுகாப்பளித்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறிப்பாக வடகிழக்கு டெல்லி அசோக் நகரில் இஸ்லாமிய குடியிருப்பு பகுதியில் வன்முறை நிகழ்ந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அங்குள்ள 40 இஸ்லாமியர் வீடுகளையும், கடைகளையும் எரித்தனர். அதுமட்டுமில்லாமல் மதியம் தொழுகையின் பொழுது மசூதியில் தஞ்சம் புகுந்த 20 க்கும் மேற்பட்டவர்களை தாக்கியதாகவும், மசூதியை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்க இடம் இல்லாமல் தவித்த இஸ்லாமிய மக்களுக்கு அருகில் வசிக்கும் இந்துக்கள் தங்கள் வீடுகளில் தங்கவைத்து பாதுகாப்பளித்துள்ளனர். வன்முறைக்கு இடையே நடந்த இந்த மத நல்லிணக்க சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT