குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.

Advertisment

union railway minister of state said, citizenship amendment bill act delhi

குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லியில் இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஜமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் 16- ஆம் தேதி முதல் போராட்டங்கள் ஈடுபட்டனர். பின்னர் அங்கு போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்தும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Advertisment

union railway minister of state said, citizenship amendment bill act delhi

இந்நிலையில் மீண்டும் டெல்லி ஜாபர்பாத் பகுதியில் போராட்டக்காரர்கள்- காவல்துறைக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை டெல்லி போலீசார் கலைத்தனர். இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அம்மாநில ஆளுநரும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

union railway minister of state said, citizenship amendment bill act delhi

இந்த நிலையில் போராட்டத்தின் போது "ரயில் உள்ளிட்ட பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவோரை சுடுங்கள" என்று மாவட்ட நிர்வாகங்கள், ரயில்வே அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி அறிவுறுத்தல்.இவரின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment