ADVERTISEMENT

கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி 'தமிழ்' மொழியில் எழுதலாம்- "மத்திய அரசு" அதிரடி அறிவிப்பு!

06:37 PM Jul 04, 2019 | santhoshb@nakk…


"REGIONAL RURAL BANKS" எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ், பஞ்சாபி, மராத்தி, உருது, அஸ்ஸாமி,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த தேர்வுகள் ஏற்கனவே ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தேர்வை 'Institute of Banking Personnel Selection' (IBPS) என்ற அமைப்பு ஆண்டுதோறும் நடத்தி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாநில மொழிகளில் வங்கி தேர்வை நடத்துவதன் மூலம் அதிகமான கிராமப்புற இளைஞர்கள் வங்கியில் பணிப்புரியும் வாய்ப்பு கிடைக்கும் என்பது எவராலும் மறுக்க முடியாது. அதே போல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், இத்தகைய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளுக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT