ADVERTISEMENT

பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி கொடுத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் அறிவிப்பு!

07:45 PM Aug 08, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டால், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருடன் அணி சேர தயார் என்று பீகாரின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக் கூறியுள்ளது.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பா.ஜ.க.வும் நடத்தி வரும் கூட்டணி ஆட்சியில், நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார். சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 சட்டப்பேரவை உறுப்பினர்களும், பா.ஜ.க.வுக்கு 77 சட்டப்பேரவை உறுப்பினர்களும் இருக்கும் நிலையில், அண்மைக் காலமாக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தனது கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நிதிஷ் குமார், தலைநகர் பாட்னாவில் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த சூழலில், பா.ஜ.க. உடனான உறவை முறித்துக் கொண்டால், முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் கூட்டணி வைக்க தயார் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூறியுள்ளது.

243 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 116 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT