ADVERTISEMENT

என்னுடைய நீண்டகால நண்பரை இழந்துவிட்டேன் - பாஸ்வான் மறைவு குறித்து பிரதமர் மோடி வருத்தம்!

11:59 PM Oct 08, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

டெல்லி மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் ராம் விலாஸ் பாஸ்வான் இன்று இரவு 8 மணி அளவில் காலமானார். அவரின் இறப்பை அவரது மகன் உறுதிபடுத்தியுள்ளார். பிகார் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இவரின் இறப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு அவர் எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரின் இறப்புக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இளம் வயதிலேயே நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடிய ஒருவரை இழந்துவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார். அதேபோல, பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "என்னுடைய நீண்ட கால நண்பரை இழந்துவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT