ADVERTISEMENT

ராஜ்நாத் சிங் 'ரா' அதிகாரிகளுடன் ஆலோசனை- அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு...

01:26 PM Nov 19, 2018 | santhoshkumar


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள அதிவாலா கிராமத்தில் நிரன்காரிஸ் பவன் என்ற பெயரில் மத வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு ஞாயிற்றுக் கிழமைதோறும் மதக் கூட்டமும் விழாவும் நடைபெறும். அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவர். வழக்கம் போல் நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) நிரன்காரிஸ் பவனில் மதக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், திடீரென வெடிகுண்டுகளை வீசிச் சென்றனர். இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து இதையடுத்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ஆலோசனை நடத்தினர். மேலும் இன்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் பரிசு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்திய உளவுப்பிரிவு ’ரா’ வின் முக்கிய அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT