இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழா, சுதந்திர அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு உற்பத்தி துறையின் நாடு தழுவிய சுதந்திர அமுத பெருவிழா நிகழ்ச்சிகளைநேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், பிபின் ராவத்தின் நோக்கங்களை அடைய நாம் அயராது உழைக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகராஜ்நாத் சிங், "ஜெனரல் ராவத் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருந்தது. நமது பாதுகாப்பு படைகளை நவீனமயமாக்குவது, பாதுகாப்புத் துறையில் முழுமையான தன்னிறைவை அடைவது ஆகியவை அவரது இதயத்திற்கு நெருக்கமானதாகஇருந்தது. தற்போது இந்த நோக்கங்களை இன்னும் விரைவாக அடைய அயராது உழைக்க வேண்டியது நமது பொறுப்பு" எனக் கூறியுள்ளார்.