ADVERTISEMENT

'மோடி ஜிந்தாபாத்', 'ஜெய்ஸ்ரீராம்' கூறாததால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்...

05:10 PM Aug 08, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலத்தில் மோடி ஜிந்தாபாத், ஜெய்ஸ்ரீராம் எனக் கூற மறுத்ததால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதான கப்பர் அஹமத் கச்சாவா ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து புகையிலை கேட்டுள்ளனர். அப்போது அவர்கள், ஜெய்ஸ்ரீராம் எனக் கோஷமிடும்படியும், மோடி ஜிந்தாபாத் எனக் கூறும்படியும் கப்பர் அஹமத்தை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதற்கு மறுத்ததைத் தொடர்ந்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், "மோடி ஜிந்தாபாத், ஜெய்ஸ்ரீராம் எனக் கோஷமிடும்படி அவர்கள் வற்புறுத்தினார்கள். அதை நான் சொல்ல மறுத்ததால் என்னைக் கடுமையாகத் தாக்கினர். அங்கிருந்து ஆட்டோவில் தப்பிய என்னை விடாமல் துரத்தி வந்து அடித்தார்கள். அதை நான் சொல்ல மறுத்ததால் என்னைச் சரமாரியாக அடித்து என்னிடமிருந்த பர்ஸை பறித்துச் சென்றனர். அவர்கள் அடித்ததில் எனது பற்கள் உடைந்தன. என் இடது கண், கன்னம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு எங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பிய பின்னரே ஓய்வெடுப்போம் என்றும் அவர்கள் கூறினர்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT