/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rewre.jpg)
ராஜஸ்தானில் பார்மர் - ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்தும், டேங்கர் லாரி ஒன்றும் மோதிக்கொண்டபோதுஏற்பட்ட தீயில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த 22 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவறான பாதையில் வந்த டேங்கர் லாரி, பேருந்தின்மீது மோதியதாக விபத்தில்உயிர் பிழைத்த நபர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பார்மர் மாவட்ட ஆட்சியரையும், எஸ்.பி.யையும் தொடர்புகொண்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, இந்தக் கோர விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)