ADVERTISEMENT

ரயில்வே கேன்டீன் ஊழல் வழக்கு! -லாலு மனைவி மகனுக்கு ஜாமீன்!

03:03 PM Aug 31, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், தனது ஆட்சிக்காலத்தில் மாட்டுத்தீவண ஊழல் வழக்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றார். பலமுறை ஜாமீனுக்கு மேல் ஜாமீன் பெற்று இறுதியாக அவர் கொடுத்த மூன்று மாத ஜாமீன் மனுவை நிராகரித்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி அதாவது நேற்று சரணடைய உத்தரவிட்டது நீதிமன்றம். அதேபோல் நேற்று லாலு பிரசாத் சரணடைந்தார்.

இந்நிலையில் லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபொழுது பூரி, ரஞ்சி, பாட்னாவில் ரயில்வே துறை உணவு நிலையங்களுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவுசெய்திருந்தது. இந்த வழக்கில் ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. இன்று நேரில் ஆஜரான இருவரையும் ஒரு லட்சம் ரூபாய் சொந்த ஜாமீனில் விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT