ADVERTISEMENT

கேரளா வயநாட்டில் ராகுல் அலை!

11:20 PM Apr 25, 2019 | paramasivam

கேரளாவில் விவிஐபிக்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மட்டுமல்ல வாக்குப்பதிவின் போதும் அனல் அடித்தது.

ADVERTISEMENT

முக்கியப் புள்ளிகளான திருவனந்தபுரம் மக்களவைக்குப் போட்டியிலிருக்கும் காங்கிரஸின் சசிதரூர், பா.ஜ.க.வின் கும்மணம் ராஜசேகர். (இவரை இங்கே போட்டியிட வைப்பதற்காக அசாம் மாநில கவர்னர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டவர்) அடுத்து சி.பி.ஐ தரப்பில் திவாகரன். இவர்களில் திவாகரன் திருவனந்தபுரம் சிட்டிங் எம்.எல்.ஏ. ஈழவா சமூகம் சார்ந்தவர். மற்றவர்கள் இருவரும் தொகுதியில் வாக்கு மெஜாரிட்டியில் இருக்கிற நாயர் சமூகத்தவர்கள்.

ADVERTISEMENT

3ம் கட்ட வாக்குப்பதிவான ஏப் 23 அன்று திருவனந்தபுரத்தில் மட்டுமல்ல கேரளா முழுக்க விறுவிறுப்பான வாக்குப்பதிவு. குறிப்பாக இஸ்லாமியர்கள் நிறைந்துள்ள பகுதிகளின் வாக்குச் சாவடிகளின் வாக்கு இயந்திரங்கள் மக்கர் செய்துள்ளன. திருவனந்தபுரம் தொகுதியின் வட்டியூர் காவூ சட்டமன்றத்தின் 151 நிர் பூத்தில், தன் வாக்கைப் பதிவு செய்திருக்கிறார் வாக்காளரான எபின். அப்போது கைக்குபட்டனை அழுத்தியதில் தாமரையில் பதிவாகி லைட் எரிந்தது என்று மையத்தின் தேர்தல் அலுவலரிடம் அவர் புகார் செய்திருக்கிறார். இதனால் பரபரப்பான அதிகாரிகள் வி.வி.பேடை செக் செய்ததில், அது தவறின்றி சரியாகப் பதிவானது தெரிய வந்த பிறகே வாக்குப்பதிவு தொடர்ந்திருக்கிறது ஆனாலும் தவறான தகவலைத் தந்து பரபரப்புக் கிளப்பிய காரணத்தால் விபின் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணை செய்த போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, பின் விடுவித்திருக்கிறது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைகள் வாக்காளர்களுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது.

வயநாட்டில் ராகுல் வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்திலிறங்கினார். உடன் ப்ரியங்கா காந்தியும் சென்றது அங்குள்ள வாக்காளர்கள் மத்தியில் மட்டுமல்ல கேரளாவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.எம்.மின் சுனீர், பா.ஜ.க.வின் ஆதரவோடு போட்டியிட்ட மாநில இந்து அமைப்பான பி.டி.ஜே.எப்.பின் வேட்பாளர் துஷார் வென்னாப்பள்ளி போன்றவர்களின் போட்டியும் பிரச்சாரமும், ராகுலுக்குச் சவாலாக இருந்தாலும் அதையும் தாண்டி ராகுல் அலை சுனாமி போன்று அடித்தது. அதன் வெளி்ப்பாடுதான், நடந்த பல்வேறு தேர்தல்களின் போது வாக்குப் பதிவுகளில் ஆர்வம் காட்டாத மலைவாழ் தாழ்த்தப்பட்டவர்கள், மற்றும் மலைவாழ் பழங்குடி இனமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தது என்கிற அரசியல் பார்வையாளர்கள், இவைகள் ராகுலுக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.

கேரள சரித்திரத்தின் தேர்தல் வரலாற்றில், கடந்த 30 ஆண்டு காலமாக வாக்குப்பதிவின் சதவிகிதம் 70 என்றிருந்தது, இந்தத் தேர்தலில் அந்த ரெக்கார்டை நொறுக்கும் வகையில் வாக்குப்பதிவின் சதவிகிதம் 77. 61 ஆக உயர்ந்ததற்கு மாநிலத்தின் 20 மக்களவைத் தொகுதிகளிலும், போட்டிக்கு நின்ற வேட்பாளர்கள் உத்திக்கு உத்தியான கடும் பிரச்சாரங்கள். ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்பதையே உரைக்க வைத்திருக்கிறது என்கிறார்கள்.

குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், கேரளா மாநிலத்திலேயே கண்ணூர் மக்களவையில் மட்டும், வாக்குப் பதிவு 82 சதமாக உயர்ந்தது விழிகளை விரியவைக்கும் சங்கதி. அங்கே சி.பி.எம்.மின் வேட்பாளர் ஸ்ரீமதி டீச்சர், காங்கிரசின் கே. சுதாகரன், பாஜ.கவின் பத்மநாபன் என மும்முனைப் போட்டி என்றாலும், சி.பி.எம். காங்கிரஸ் வேட்பாளர்களிடையேதான் பிரதான போட்டி. ஊசிக்கு ஊசி பாயுமா என்கிற ஆச்சர்யக் கேள்விக்கான தொகுதி. இதன் பூர்வரங்கத்தை அறிந்த,சி.பி.எம. சி.பி.ஐ இரு கட்சியின் தோழர்களும், தொகுதியில் தோழோடு தோள் நின்றார்கள். அண்ணன் தம்பி போன்று இணைந்து, களத்தில் நிற்பது தாங்கள் தான் என்று ஒவ்வொருவரும் கருதிக் கொண்டு பிரச்சாரக் களத்தை எதிர் கொண்டிருக்கிருக்கிறார்கள். தொகுதியில் வருகிற அனைத்து பேரவைப் பகுதியின் வாக்காளர்களின் வீடு வீடாக மூன்று முறை படியேறிப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். விளைவு தோழர்களின் இந்தக் கடுமையான பிரச்சார உழைப்பு, தாழ்த்தப்பட்ட பழங்குடி, மற்றும் மலைவாழ் பூர்வகுடி மக்களையும் தரையிறங்கி வாக்களிக்க வைத்த சாதனை. பலன் 82 சதவிகித வாக்குப் பதிவை எட்டியிருக்கிறது கண்ணூர்.

தமிழகம் போன்று, வாக்குகள் அங்கே ஏலம் போகவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT