ADVERTISEMENT

காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு; நெகிழவைத்த ராகுலின் இறுதி மரியாதை!

11:13 AM Feb 19, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் கேப்டன் சதீஸ் சர்மா (73). முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விமானியாக இருந்தபோது அவரோடு நட்பானவர். பின்னர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின், ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தபோது, சதீஸ் சர்மாவும் அரசியலில் இறங்கினார். ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த இவர், ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகும் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

1984 ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் ஈடுபட்டு வரும் இவர், மூன்றுமுறை மக்களவை உறுப்பினர், மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினர் என ஆறுமுறை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளார். இறுதியாக 2010 - 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இந்தநிலையில் அவர் பிப்ரவரி 17 ஆம் தேதி கோவாவில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதனையடுத்து அவரது உடல் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு இன்று (19.02.2021) இறுதி சடங்குகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இறுதி சடங்கிற்குப் பிறகு அவரது உடலை சுமந்து சென்று, கட்சியின் மூத்த தலைவரும், தனது தந்தையின் நண்பருமான சதீஸ் சர்மாவிற்கு மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT