ADVERTISEMENT

யாரையும் சாராமல் வாழ வேண்டும் - பஞ்சாப் அரசு வேலையில் அமர்ந்த 'மாற்றான்' சகோதரர்கள்! 

06:51 PM Dec 23, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒட்டி பிறந்த இரட்டையர்களான சோஹ்னா மற்றும் மோஹ்னாவுக்கு பஞ்சாபின் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்-ல் பணிக்கு சேர்ந்துள்ளனர். இந்த இரட்டையர்களுக்கு இரண்டு இதயங்கள், இரண்டு ஜோடி கைகள், இரண்டு சிறுநீரகங்கள் ஆகியவை உள்ளன. ஆனால் கல்லீரல், பித்தப்பை போன்றவை இந்த இரட்டையர்களுக்கு ஒன்றுதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மருத்துவமனையில் பிறந்த இவர்களை பெற்றோர் கைவிட்டு விட்டனர். பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்குள்ள மருத்துவர்கள், இரட்டையர்களை தனி தனியே பிரித்தால் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என்பதால் இரட்டையர்களை பிரிக்க வேண்டாம் என முடிவு எடுத்தனர். பின்னர் மருத்துவர் ஒருவரால் பிங்கல்வாரா தொண்டு நிறுவனத்திடம் இந்த இரட்டையர்களை பற்றி கூற, அந்த தொண்டு நிறுவனம் இவர்களுக்கு உதவி வந்தது.

இந்தநிலையில் யாரையும் சார்ந்திருக்காமல் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஐடிஐயில் டிப்ளமோ படித்து வந்தனர். இந்தச்சூழலில் இவர்களை பற்றி அறிந்த பஞ்சாபின் பவர் கார்ப்பரேஷன் லிமிட்டடு அதிகாரிகள், இரட்டையர்களான சோஹ்னா மற்றும் மோஹ்னாவகையும் மாற்று திறனாளிகள் கோட்டாவில் பணிக்கு எடுத்துள்ளனர். இவர்களுக்கு ஆரம்பத்தில் மாதம் இருபதாயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

இந்த வேலை குறித்து பேசியுள்ள சோஹ்னா மற்றும் மோஹ்னாவும், "நாங்கள் மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் கடினமாக உழைப்போம். எங்களை வளர்த்து, கல்விஅளித்து, சுயசார்பாக மாற உதவிய பிங்கல்வாரா நிறுவனத்திற்கு நாங்கள் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT