ADVERTISEMENT

காவல் நிலையத்தில் ஆயுதங்களுடன் சண்டையிட நுழைந்த காலிஸ்தான் ஆதரவு கும்பல்; பஞ்சாபில் பதற்றம்

11:43 AM Feb 25, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்த அம்ரித் பால் சிங் என்பவர் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் பஞ்சாபில் மதபோதகர் என்ற ரீதியிலும் காலிஸ்தான் ஆதரவாளர் என்ற ரீதியிலும் செயல்பட்டு வருபவர் ஆவார்.

இந்நிலையில், பஞ்சாபின் ரூப்கர் மாவட்டம் சாம் கவுர் சாகிப் என்ற பகுதியை சேர்த்த பரிந்தர் சிங் என்பவரை கடத்திச் சென்று தாக்கியதாக அம்ரித் பால் சிங் உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில் ஒருவரான லவ் ப்ரீத் சிங்க் என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து இருந்தனர்.

கைது செய்யப்பட்ட லவ் ப்ரீத் சிங்கை மீட்பதற்காக அம்ரித் பால் சிங் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அஜினாலா காவல் நிலையத்திற்கு வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வந்து காவலர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவலர்கள் லவ் ப்ரீத் சிங்கை விடுவிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் லவ் ப்ரீத் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவித்து உள்ளனர்.

அம்ரித் பால் சிங் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்றுள்ள இச்சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜினாலா பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT