திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா காவல்நிலையத்தின் சார்பில், ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்பகுதிகளில் 144 தடை உத்தரவை முன்னிட்டு மக்கள் யாரும் வெளியே வராத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.
வாணியம்பாடி 100 சதவீதம் ஊரடங்கு பின்பற்றப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் காவல்துறை தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கி கிராம மக்களை உள்ளேயே இருக்க வைக்க முயற்சித்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/56565656565tg_0.jpg)
வாணியம்பாடி தாலுகா காவல்நிலைய ஆய்வாளராக இருப்பவர் மங்கையர்கரசி, இவர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, சாலையில் சுற்றி திரிந்த மனநோயாளிகளுக்கு உணவு, விலங்குகளுக்கு உணவு பொருட்கள் என அவைகளை தந்து அதன் பசியை போக்கிவந்தார்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ரேபிட் கிட் மூலம் காவல்துறையினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என வந்ததால், அடுத்ததாக கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு பாசிட்டிவ் என்றரிசல்ட் ஏப்ரல் 23ந் தேதி வந்தது. அதனை தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேபோல், அவர் பணியாற்றிய காவல்நிலையம் பூட்டப்பட்டது. காவல்நிலையத்தில் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களின்பயண அட்டவணை தயாரிக்கப்படுகிறது.அதன்படி அடுத்தகட்டமாக அந்தந்த பகுதிகள், சம்மந்தபட்ட நபர்களிடம் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_267.gif)