ADVERTISEMENT

கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு... துணை ஜனாதிபதிக்கு கருப்புக்கொடி காட்ட மாணவர்கள் முடிவு!

11:05 AM Feb 21, 2020 | santhoshb@nakk…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துணை ஜனாதிபதி வருகின்ற சமயத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்புகளை சார்ந்தவர்கள் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ADVERTISEMENT

"புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் இந்தியாவில் 49 பல்கலைக்கழகத்தில் இல்லாத கட்டணத்தை உயர்த்தியுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். உயர்த்தப்பட்ட கட்டணம் நாட்டில் உள்ள 49 பல்கலைக்கழகத்தின் கட்டணத்தை விட 225 மடங்கு அதிகமானவை. இதனை எதிர்த்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இத்தகைய செயலை கண்டுகொள்ளாத துணை நிலை ஆளுநரையும், அரசையும் கண்டிக்கும் வகையில் வருகின்ற 22- ஆம் தேதி புதுச்சேரி வருகை தரும் துணை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி காட்ட மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம், திமுக மாணவரணி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய தேசிய இளைஞர் முன்னணி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்பினர் கலந்து கொண்டு லாஸ்பேட்டை சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT