ADVERTISEMENT

"மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடமிருந்து மக்கள் விடுதலை" - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

01:53 PM Feb 25, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் நடந்த பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில், வணக்கம் எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய வளர்ச்சிப் பணிகள் புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளைக் கொண்டு வரும். சிறிது நேரத்திற்கு முன் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன. சுயசார்பு திட்டத்தில் புதுச்சேரி முக்கிய பங்காற்றும். புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருகிறது; மாநில மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடம் இருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர். புதுச்சேரியில் மக்களுக்கான அரசு அமையவில்லை. காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி இயங்கிய புதுச்சேரி அரசு, அனைத்து நிர்வாகத்தையும் சீரழித்துவிட்டது.

புதுச்சேரியில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு, வரும் சட்டமன்றத் தேர்தலில் அமையும். புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை; மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் ஜனநாயகத்தை அனைத்து வகையிலும் அவமதிக்கின்றனர். மீனவ பெண் கூறிய புகாரைத் தவறாக மொழிபெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி. குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பிரிவினைவாத அரசியலைச் செய்து வருகிறது. பொய் சொல்வதில் தங்கம், வெள்ளி பதக்கங்களைப் பெறக் கூடியவர்கள் காங்கிரஸ் கட்சியினர். மன்னர் பரம்பரை போல் கட்சியை வழி நடத்துகிறது காங்கிரஸ் கட்சி. பரம்பரை அரசியல் நாடு முழுவதும் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது.

புதுச்சேரியில் இளைஞர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை பா.ஜ.க. உருவாக்கித் தரும். புதுச்சேரியில் கல்வி கட்டமைப்பை உருவாக்குவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குறிக்கோளாக இருக்கும். உள்ளூர் மொழியில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிட அரசு கூட்டுறவுத்துறையை சரியாக பராமரிக்கவில்லை. கூட்டுறவுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இம்முறை வாக்களிக்கும்போது வளர்ச்சிக்கு எதிரானவர்களை நிராகரியுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி அரசியலுக்குப் புதுச்சேரி மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT