ADVERTISEMENT

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 

12:13 PM Nov 26, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கிய நிலையில் இன்று விண்ணில் பாய்ந்துள்ளது. இந்தாண்டில் 5 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் இதுவாகும். இதனுடன் 8 நேனோ செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள், 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. மேலும் அமெரிக்காவின் 4 செயற்கைக்கோள்கள் மற்றும் பூடானின் 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது.

புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் ஈஓஎஸ்-6 போன்ற செயற்கைக்கோள்கள் வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. கடலின் வெப்ப மாறுபாடு, கடற்பரப்பின் வேறுபாடுகளை அறிய உதவும் என சொல்லப்படுகிறது.

ராக்கெட்டின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக கண்காணித்துக் கொண்டுள்ளனர். பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு குவிந்திருந்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT