rgzs

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் வானில் ஒரு மர்ம பொருள் பறந்ததாக வீடியோ ஒன்று வைரலானது. அது ஒரு பறக்கும்தட்டு எனவும், அதனை அந்த கிராம மக்கள் நேரில் பார்த்ததாகவும் கூறினர். இதனை தொடர்ந்து இந்தியாவில் ஏலியன் நடமாட்டம் உள்ளதா என சமூகவலைதளங்களில் பெருமளவு விவாதிக்கப்பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து இது குறித்து மாநிலங்கவையிலும், பிறகு செய்தியாளர்களிடமும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், 'பொதுமக்கள் பெரும்பாலும் பறக்கும்தட்டுகள் என கூறுபவை ஏதேனும் விமான செயல்பாடுகளாகவோ அல்லது இயற்கை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளாகவோ தான் இருக்கின்றன. இதுவரை இஸ்ரோ எந்தவொரு பறக்கும்தட்டையும் இந்தியாவில் கண்டறியவில்லை' என கூறினார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் மணிப்பூரில் உள்ள மக்கள் பறக்கும் தட்டை பார்த்ததாக கூறி, அது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.