ADVERTISEMENT

கிரிக்கெட் போட்டியுடன் காங்கிரஸை ஒப்பிட்டு விமர்சித்து பேசிய பிரதமர் மோடி!

04:44 PM Nov 19, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

இதையொட்டி, ராஜஸ்தானில் சுரு பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (19-11-23) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேனாக வருபவர் தன்னுடைய அணிக்கு அதிக ரன்களை குவிப்பார். ஆனால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதிலே குறியாக இருக்கிறார்கள்.

இந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒருவரை ஒருவர் அவுட் ஆக்கவே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவுட் ஆகிறவர்கள், பெண்கள் மற்றும் இதர பிரிவினர் பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில், அவுட் ஆகாமல் எஞ்சி இருப்பவர்கள் ஊழலிலும், மேட்சி பிக்சிங்கிலும் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸின் தவறான ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலத்தில் வேலையின்மை அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT