ADVERTISEMENT

புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம் - தேசியகொடியேற்றிய நாராயணசாமி!!

04:06 PM Nov 01, 2018 | sundarapandiyan

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி 1954-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி விடுதலை பெற்றது. 'புதுச்சேரி விடுதலை பெற்ற அந்நாளை அரசு விடுமுறையாக அறிவித்து கொண்டாட வேண்டுமென்று புதுச்சேரி பிரஞ்சிந்திய விடுதலைக்கால தியாகிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதையடுத்து புதுச்சேரி விடுதலை நாளை அரசு விழாவாக கொண்டாட கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலிருந்து கடந்த 2014 முதல் விடுதலை நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த ஆண்டு விடுதலை நாள் விழா இன்று கடற்கரை சாலையில் நடைபெற்றது. காந்தி சிலை எதிரில் முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கலை நிகழ்ச்சிகள் தொடங்கியதும் மழை பொழிந்தது. அதனால் சிறிது தடைபட்ட மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி பின்னர் உடனடியாக தொடர்ந்து மழையிலும் நடைபெற்றது. இதனை அடுத்து மேடையில் இருந்து இறங்கி வந்த நாராயணசாமி மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT