ADVERTISEMENT

ஆக்கிரமிப்பு வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டதை கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ தலைமையில் மறியல்! 

04:08 PM Sep 27, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ளது ராசு உடையார்தோட்டம். இது ரயில்வேக்கு சொந்தமான இடம். அந்த இடத்தில் 40 ஆண்டுகளாக குடியிருந்தவர்களை வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு வேறு இடத்தில் குடியிருப்பு ஒதுக்கி தருவதாக அரசு உத்தரவாதம் கொடுத்து இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று ரயில்வே போலீசார் முன்னிலையில் ரயில்வே இடத்தை ஆக்கிரமித்த வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்றுவந்தது. சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு சென்ற அத்தொகுதியின் திமுக எம்.எல்.ஏ கென்னடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ உட்பட 50 பேரை போலீசார் கைது செய்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, பின்னர் விடுவித்தனர். இதனை தொடர்ந்தும் பொது மக்கள் அண்ணா சிலை அருகே மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநில தி.மு.க அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான சிவா உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள் காவல் நிலையத்திற்கு வந்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்தை உடனடியாக வழங்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT