Skip to main content

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சங்கு ஊதி மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்.  


புதுச்சேரி வில்லியனூரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட புதுச்சேரியில் அனைத்து மருத்துவமனைகளிலும் உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றும், கிராம புறங்களில் அவசர சிகிச்சை அளிக்க போதுமான  மருத்துவர்கள் இல்லை என்றும் பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். 

puducherry govt hospital not get facilities, peoples political parties strike


இதனை கண்டித்து கிராம்ப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைமையில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, தமிழர் களம், தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட அனைத்து பொதுநல அமைப்புகளும் ஒன்றிணைந்து வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைத்துக்கு சங்கு ஊதி மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்தும் பலருக்கு வாழ்வளிக்கும் முதியவர்; மரியாதை செலுத்திய அரசு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
State Honors at Funeral of Organ Donors in Trichy

தமிழகத்தில் இறந்த பிறகும் தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நபர்களின் இறுதிசடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த வீரப்பன்(80) என்பவர் வாகன விபத்தில் சிக்கி திருச்சி அரசு  தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது  கல்லீரல் கார்னியா, தோல் தானமாக பெறப்பட்டது.  வீரப்பன் உடலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி,  மருத்துவமனை முதல்வர் நேரு,  எம்.எஸ்.அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று ராயல் சல்யூட் வைத்து வேனை வழியனுப்பி   வைத்தனர்.

கடந்த 2007 - 2008 ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால் இந்த  உடல் உறுப்பு தான திட்டம் கொண்டு வரப்பட்டது.  உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.  விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.   நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும் கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.