ADVERTISEMENT

பணிக்கு தந்த ஏகே 47 துப்பாக்கியுடன் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த காவலர் !!

12:53 PM Jun 28, 2018 | vasanthbalakrishnan

ஜம்மு காஷ்மீரில் காவலர் பணியில் தனக்கு தந்த துப்பாக்கியுடன் காணமல் போன காவலர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த செய்தி ஜம்முவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

காஷ்மீர் மாநில சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரியாக புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த இர்ஃபான் அகமது தர் என்பவர் பணியாற்றி வந்தார். அந்த பணியில் அவருக்கு ஏ.கே 47 ரக துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால் திடீரென காணாமல் போன இர்ஃபானை போலீஸார் தேடிவந்தனர். இந்த தேடுதலில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தற்போது அந்த காவல் அதிகாரி தனக்கு பணியில் கொடுக்கப்பட்ட ஏ.கே 47 துப்பாக்கியுடன் காஷ்மீரின் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.

அந்த காவலர் தங்கள் அமைப்புடன் சேர்ந்துவிட்டதாக ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாத கும்பல் அதே புல்வாமா மாவட்டதிலுள்ள காஷ்மீர் சிறப்பு பாதுகாப்பு துறையின் மற்ற இரண்டு அதிகாரிகளான சாஹிர் அகமது பட் மற்றும் சஜசத் அகமது என்பவர்கள் வீட்டிற்கு சென்று தக்குதல் நடத்தி காவலர் பணியை ராஜினாமா செய்யுமாறு மிரட்டியுள்ளனர்.

பணிக்கு தந்த துப்பாக்கியுடன் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த காவல் அதிகாரி மற்றும் காவலர் பணியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லி காவல் அதிகாரிகளை மிரட்டிய சம்பவம் என இந்த இரு சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT