ADVERTISEMENT

நீதிமன்றத்தின் அதிருப்திக்கு மத்தியில் நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்!

12:13 PM Dec 10, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

இந்தியாவில் தற்போது இயங்கி வரும் பாராளுமன்ற கட்டிடம் 93 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆதலால், இந்த பாராளுமன்றத்திற்கு பதிலாக, புதிய பாராளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்புதிய பாராளுமன்ற கட்டிடடம், அதிகமான உறுப்பினர்கள் அமரும் வகையில், நான்கு தளங்களோடு, 971 கோடியில் காட்டப்படவுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில், புதிய நாடளுமன்ற கட்டிடத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வாங்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்து, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தவழக்கு கடந்த 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், புதிய நாடளுமன்ற கட்டிடத்திற்கு எதிராக வழக்கு நிலுவையில் இருக்கையில், அதன் கட்டுமானப் பணிகளை எப்படி தொடங்கலாம் என அதிருப்தி தெரிவித்ததோடு, கட்டுமானப் பணிகளை தொடங்கமால் பூமி பூஜை மட்டும் நடத்தலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி, இன்று மதியம் 1 மணிக்கு நடக்கும் விழாவில், புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT