ADVERTISEMENT

பெட்ரோல் விலை உயரும் அபாயம்...!

01:15 PM Apr 26, 2019 | tarivazhagan

இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்வான் உள்ளிட்ட எட்டு நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவருகிறது. ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தியது.

ADVERTISEMENT


அதனை தொடர்ந்து ஈரானிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்வான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு இந்த ஆண்டு மே மாதம் 4-ம் தேதி வரை சலுகை அறிவித்தது. அதனால், இன்னமும் ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் சலுகையை அமெரிக்கா நீட்டிக்குமா என்பது தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்கா அளித்துவரும் சலுகையின் காலக்கெடு நெருங்கி வருவதால் கச்சா‌ எண்ணெய் இறக்குமதி‌ செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்‌ என இந்தியா உள்ளிட்‌ட 5‌ நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விட உள்ளதாக ‌தகவல் வெளியாகியுள்ளது. மே 4-ம் தே‌திக்கு பிறகும் க‌ச்சா எண்ணெய் இற‌க்குமதியை தொடரும் நாடுகளுக்கு‌‌‌‌ அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கவும் வாய்ப்‌புள்ளதாக தெரிகிறது.‌‌

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தியா வாங்கும் ப்ரெண்ட் (BRENT) வகை கச்சா எண்ணெய் விலை லண்டன் சந்தையில் பீப்பாய்க்கு 75.42 டாலரை எட்டியுள்ளது. ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரும் மே 4-ம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் திட்டவட்ட அறிவிப்பே அதன் விலை உயரக் காரணமாக உள்ளது. ஏற்கெனவே எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் கட்டுப்பாடும் சேர்ந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை வெகுவேகமாக உயரக் காரணமாக அமைந்துள்ளது. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு உள்ளாகியுள்ளது. ஆனால், கடந்த மாதம் பெட்ரோல் விலையைக் குறைக்க சவுதியிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT