asian games

கபடி என்றாலே இந்தியா என்ற நிலைதான் உலகெங்கிலும் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் எந்த ஒரு உலகத்தர கபடி போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்ததில்லை,முக்கியமாக கபடி உலகக்கோப்பையிலும் ஆசியா விளையாட்டிலும் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால், தற்போது நடக்கும் ஆசியா விளையாட்டு போட்டியில் இந்திய ஆண் மற்றும் பெண் கபடி அணி தோல்வியடைந்து. தங்கத்தை கோட்டைவிட்டுள்ளது. ஆண் மற்றும் பெண்ணுக்கான இருவேறு கபடி போட்டியில் ஈரான் அணியே தங்கம் வென்றுள்ளது. அதிலும் ஈரான்பெண் அணியை வழிநடித்தியது ஒரு இந்திய பெண் என்பதுதான் முக்கியமான விஷயம்.

Advertisment

ஆமாம், இந்தியாவில் பிறந்து வளர்ந்த பெண்ணான ஷைலஜா ஜெயின்தான் ஈரான் பெண் அணி வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். இவர் இந்திய பெண் கபடி அணிக்காக தன்னை கோச்சாக நிர்ணயிப்பார்கள். கண்டிப்பாக நம் தலைமையில் இந்திய பெண் கபடி அணி தங்கம் வெல்லும் என்று கனா கண்டுகொண்டிருந்தவரை இந்திய கபடி சங்கம் ஒதுக்கியது. ஆனால், இவர்மனம் தளராமல் கபடி கோச்சாக சாதித்து காட்டுவேன் என்று நாடு கடந்து ஈரானுக்கு சென்றார். ஈரானில் பல வழக்கங்கள் இருந்தாலும், இவர் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஈரான் பெண் அணிக்கு கோச்சாக திறம்பட செயல்பட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் கூறுகையில்," ஈரான் பெண்களுக்கு கபடி டெக்னீக்கை நன்கு கற்றுக்கொடுத்தேன். எனக்கு தங்கம் வாங்குவதுதான் முதலாக இருந்தது அடுத்ததாகத்தான் நான் வெற்றியைப்பற்றி யோசித்தேன். தங்கம் வாங்கும் ஒரு அணியை மட்டுமே உருவாக்க நினைத்தேன். அதற்கான மொத்த அதிகாரமும் என்னிடம் இருந்தது. எந்த ஒரு காரணத்தை .கொண்டும், அணியை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை, இறுதியில் அந்த 12 பேரை அணியாக உருவாக்க கையெழுத்து போடும் அளவிற்கு எனக்கு அதிகாரம் இருந்தது" என்றார்.