ADVERTISEMENT

பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மறைவு... பிரதமர் இரங்கல்...

09:12 PM Aug 17, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் பழம்பெரும் பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்.

90 வயதான பண்டிட் ஜஸ்ராஜ் 1930-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியில் பிறந்தவர். பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஜஸ்ராஜ், பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத பாடகராகத் திகழ்ந்தவர். 2000-ஆம் ஆண்டு இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. கரோனா ஊரடங்குக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த அவர், ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், மாரடைப்பால் இன்று அவர் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பண்டிட் ஜஸ்ராஜ் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பண்டிட் ஜஸ்ராஜ் அவர்களின் துரதிர்ஷ்டவசமான மறைவு இந்தியக் கலாச்சாரத் துறையில் ஆழமான வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது. அவரது விளக்கக் காட்சிகள் மிகச்சிறந்தவை மட்டுமல்லாமல், பல பாடகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் ஒரு அடையாளத்தை வெளிப்படுத்தினார். உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT