ADVERTISEMENT

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

09:29 PM Jan 25, 2020 | kalaimohan

மத்திய அரசின் சார்பில் இந்த ஆண்டு 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மறைந்த அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஸ்மா சுவராஜுக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் தொழில் துறையில் டிவிஎஸ் வேணு சீனிவாசனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் கரண் ஜோஹர், விளையாட்டு வீரர் ஜாஹிர் கான், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


தமிழகத்தைச் சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ சபி மகபூப், ஷேக் மகபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்து விளங்கிய பிரதீப் தலப்பிலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த விகே முனுசாமி கிருஷ்ண பக்தருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்க்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் மற்றும் கல்வி துறையில் புதுச்சேரியை சேர்ந்த மனோஜ் தாஸுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷன் விருது விளையாட்டு பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT